கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி மற்றும் குளித்தலை காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாக கார்த்திக் ராஜா (37) மற்றும் நூர் (56) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர். ஆலமரத்துப்பட்டியில் மது விற்ற கார்த்திக் ராஜா மற்றும் குளித்தலை பேராளம்மன் கோவில் தெருவில் வெளி மாநில மதுப்பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற நூர் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்கு வைத்திருந்த 72 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.