கரூர் பசுபதிபாளையம் ராமனூர் பகுதியைச் சேர்ந்த ஆனந்தகுமார் (34) என்பவர் சுக்காலியூரில் சாலையில் நடந்து சென்றபோது, முகேஷ் (எ) ராமசுப்பிரமணியம் (40) மற்றும் சீனிவாசன் (45) ஆகிய இருவர் கத்தியைக் காட்டி மிரட்டி, மது அருந்த பணம் கேட்டு அவரிடம் இருந்த 1050 ரூபாயைப் பறித்துச் சென்றனர். இது குறித்து ஆனந்தகுமார் அளித்த புகாரின் பேரில், தாந்தோணி மலை போலீசார் வழக்குப்பதிந்து இருவரையும் கைது செய்தனர்.