கரூரில் கார் மோதி இரண்டு பேர் படுகாயம்

205பார்த்தது
கரூரில் கார் மோதி இரண்டு பேர் படுகாயம்
ஈரோடு மாவட்டம் கொடுமுடி சாலைப்புதூரைச் சேர்ந்த தீபக் (28) என்பவர் நேற்று முன்தினம் தனது பைக்கில் தனபால் என்பவரை பின்னால் அமர வைத்துக் கொண்டு நொய்யல் குறுக்கு சாலையில் சென்றபோது, எதிரே வந்த தினேஷ் கண்ணன் ஓட்டி வந்த கார் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தீபக்கின் சகோதரர் முகிலன் அளித்த புகாரின் பேரில் வேலாயுதம்பாளையம் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி