கரூர் மாவட்டம் உப்பிடமங்கலம் அடுத்த லிங்கத்தூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் (36) என்பவர், நேற்று முன்தினம் புலியூர் சாலையில் பைக்கில் சென்றபோது, எதிரே வந்த சக்திவேல் ஓட்டி வந்த டிவிஎஸ் எக்ஸ்எல் வாகனம் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். தமிழ்ச்செல்வன் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.