கரூர் புலியூர் அடுத்த மணவாடியை சேர்ந்த பழனிச்சாமி (55) என்பவர் நேற்று கவுண்டம்பாளையம் சாலையில் தனது பைக்கில் சென்றபோது, எதிரே வந்த நாராயணன் ஓட்டி வந்த பைக் மோதியதில் இருவரும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர். நாராயணன் கரூர் அரசு மருத்துவமனையிலும், பழனிச்சாமி கோவை தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பசுபதிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.