கடந்த 9 ஆம் தேதி கரூர் காசாகாலனி செட்டிபாளையத்தை சேர்ந்த ராமன் (50) தனது டிவிஎஸ் எக்ஸெல் வாகனத்தில் ஜெயந்தி என்பவரை பின்னால் அமர வைத்து பழைய சுக்காலியூர் பெட்ரோல் பங்க் அருகே சென்றபோது, அதே பாதையில் வந்த சந்தோஷ் பாலாஜி ஓட்டி வந்த கார் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ராமன் அளித்த புகாரின் பேரில் பசுபதிபாளையம் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.