மலையம்பாளையம் மயானம் அருகே டூவீலர்கள் மோதல்; 4 பேர் படுகாயம்

62பார்த்தது
மலையம்பாளையம் மயானம் அருகே டூவீலர்கள் மோதல் நான்கு பேர் படுகாயம். கரூர், வெங்கமேடு, எம்ஜிஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் வயது 30. இவரது இளைய சகோதரன் கௌதம் வயது 26. இவர்கள் இருவரும் மார்ச் 24ஆம் தேதி மாலை 4 மணி அளவில், கரூர்-சேலம் சாலையில் அவர்களது டூவீலரில் சென்று கொண்டிருந்தனர். கோகுல் டூவீலரை ஓட்டிச் சென்றார். இதே போல, நாமக்கல் மாவட்டம், வேலூர், பொன்னகர் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ மணிகண்டன் வயது 29. இவரும் அடையாளம் தெரியாத மற்றொரு நபரும், மற்றொரு டூவீலரில் அதே சாலையில் பின்னால் வந்தனர். 

இவர்களது வாகனம் மலையம்பாளையம் மயானம் அருகே வந்தபோது, இளங்கோ மணிகண்டன் ஓட்டிச் சென்ற டூவீலர், கோகுல் ஓட்டிய டூவீலரின் பின்னால் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு வாகனங்களும் கீழே விழுந்து விபத்து ஏற்பட்டதில் நான்கு பேருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டன. நால்வரையும் மீட்டு இதில் இளங்கோ மணிகண்டனை நாமக்கல் அரசு மருத்துவமனையிலும், மற்ற மூன்று பேரையும் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இச்சம்பவம் தொடர்பாக கோகுல் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இளங்கோ மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Job Suitcase

Jobs near you