கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, வீரியம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசலம் (வயது 39). இவர் டிசம்பர் 14ம் தேதி மாலை 4 மணி அளவில், கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ரெட்டிபாளையம் பகுதியில் செயல்படும் கொங்கு மெஸ் எதிரே அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சென்டர் மீடியனில் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் அவருக்கு வலது மார்பு, வலது கால் முட்டி, வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்த வெங்கடாசலம் சிகிச்சை பலனின்றி டிசம்பர் 21 ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வெங்கடாசலத்தின் மனைவி சத்யபிரியா என்பவர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உயிரிழந்த வெங்கடாசலத்தின் உடலை அதே மருத்துவமனை சவக்கிடங்குக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.