கரூர் மாவட்டம், பசுபதிபாளையம், வடக்கு தெரு, ஏவிபி நகர், 6வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் தனபால் மனைவி மகேஸ்வரி வயது 42. இவரும் இவரது மாமனார் ராமசாமி வயது 61 என்பவருடன் டிசம்பர் 29ஆம் தேதி மாலை 6 மணி அளவில், தொழில்பேட்டையில் இருந்து பசுபதிபாளையம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டு இருந்தனர். டூவீலரை மகேஸ்வரி ஓட்டி ராமசாமி பின்னால் அமர்ந்து சென்றார்.
இவர்களது வாகனம் பசுபதிபாளையம் பகுதியில் உள்ள டிபன் சென்டர் எதிரே வந்த போது, எதிர்திசையில் TN 47 W 4874 என்ற எண் கொண்ட மற்றொரு டூவீலரில் வேகமாக வந்த நபர், மகேஸ்வரி ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் டூவீலரில் பின்னால் அமர்ந்து வந்த ராமசாமிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கோவையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக மகேஸ்வரி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும் அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் பசுபதிபாளையம் காவல்துறையினர்.