கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திருவள்ளுவர் விளையாட்டு மைதானத்தில், தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் 49வது பிறந்தநாளை முன்னிட்டு, கரூர் மாவட்ட திமுக சார்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சிலம்பம் போட்டி இன்று (நவம்பர் 15) காலை 10 மணி அளவில் நடைபெற்றது. இந்த நிகழ்வில், முன்னாள் அமைச்சர் கரூர் மாவட்ட கழக செயலாளர் வி. செந்தில்பாலாஜி போட்டிகளை துவக்கி வைத்தார். இதில் சட்டமன்ற உறுப்பினர்கள் இளங்கோ, சிவகாம சுந்தரி, ராஜேந்திரன், வடக்கு பகுதி செயலாளர் பாண்டியன், ஒன்றிய செயலாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.