கரூர் மாவட்டம் வெள்ளியணை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் அல்ட்ராடெக் சிமெண்ட் மற்றும் அகர்வால் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் சிகிச்சை முகாமில் அல்ட்ராடெக் தலைவர் ஜெயவேல் கலந்துகொண்டு முகாமை துவங்கி வைத்தார். இந்த முகாமில் அல்ட்ராடெக் நிர்வாகம் நூறு நபர்களுக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கியது. ஏராளமான பொதுமக்கள் இந்த முகாமின் மூலம் பயனடைந்தனர்.