கரூர் அருகே சாலை தடுப்பு சுவரில் வேன் மோதியதில், வேனில் அமர்ந்திருந்த திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சுப்பிரமணி (62) காயமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று, கோவை விமல்ராஜ் என்பவரின் பொலிரோ பிக் அப் வேனில் சுப்பிரமணி கரூர் முனியப்பன் கோவில் அருகே வந்துள்ளார். அப்போது ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரில் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.