திமுகவை விமர்சித்த விஜயபாஸ்கர்: போதை கலாச்சாரம், அதிகாரிகளின் அலட்சியம் குறித்து குற்றச்சாட்டு

2பார்த்தது
கரூர் கோவை சாலையில் உள்ள விஎன்சி மகாலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில், அதிமுக மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திமுகவை கடுமையாக விமர்சித்தார். எடப்பாடி தலைமையில் அதிமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது அழைப்பை ஏற்கவில்லை என்றும், சட்ட ஒழுங்கைக் காக்க வேண்டிய அதிகாரிகளின் அலட்சியம் குறித்து அவர் கவலை தெரிவித்தார். கரூர் மாவட்டத்தில் பணம் செல்வாக்கை வைத்து திமுக வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கிறது, ஆனால் இம்முறை மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள் என்றும் விஜயபாஸ்கர் பேசினார்.

தொடர்புடைய செய்தி