கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் போராட்டம் துவக்கம்

534பார்த்தது
தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியர் சங்கத்தின் சார்பில், கிராம உதவியாளர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்கக் கோரி கரூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று முதல் தொடர் காத்திருப்பு போராட்டம் துவங்கியுள்ளது. கரூர் மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மாவட்ட பொருளாளர் சுரேஷ்குமார், வட்டத் தலைவர் தண்டபாணி, வட்டச் செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த போராட்டம் காலவரையற்ற வேலை நிறுத்தமாக தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி