திமுக கூட்டணியில் உள்ளோம்: வேல்முருகன் பேட்டி

0பார்த்தது
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு நியமன கடிதம் வழங்கும் விழா கரூரில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பேசிய கட்சியின் நிறுவனத் தலைவர் வேல்முருகன், காங்கிரஸ் கட்சி மாநில, தேசிய பொறுப்பாளர்கள் மாறுபட்ட கருத்துக்களை பதிவு செய்து வருவதாகவும், ஆயினும் திமுக கூட்டணியில் உள்ளோம் என்றும் தெரிவித்தார். தேர்தல் காலத்தில் இது போன்ற சூழல்கள் ஒவ்வொரு கட்சியும் தேர்தலில் போட்டியிட கூடுதல் இடங்களை பெறுவதற்காக செய்யும் ஒரு முயற்சியாக இருக்கலாம் என்றும் அவர் கூறினார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி கூடுதல் இடங்களை கேட்குமா என்ற கேள்விக்கு, வளர்ந்து வரும் கட்சியாக இருப்பதால் ஊடகவியலாளர்கள் கூடுதல் இடங்களை பெற்று தருமாறு கிண்டலாக கேட்டுக்கொண்டார்.

தொடர்புடைய செய்தி