கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக செயற்கை கால், சக்கர நாற்காலி, வங்கி கடன் மானியம், திறன் பயிற்சி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் சார்பாக பெண் ஓட்டுநர்களுக்கு ஆட்டோ மானிய உதவித் தொகையும் வழங்கப்பட்டது. மொத்தம் 7 பயனாளிகளுக்கு ரூ. 2.4 லட்சம் மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.