கரூர் மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் 11 பயனாளிகளுக்கு ரூ. 8.33 லட்சம் மதிப்பீட்டில் நவீன செயற்கை கால்கள், காதொலி கருவிகள் மற்றும் பேட்டரி வீல் சேர் போன்ற நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். பொதுமக்களின் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டது.