கரூர் மாவட்டத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. கடவூர், மயிலம்பட்டியில் அதிகபட்சமாக 30.50 மி.மீ. மழையும், கிருஷ்ணராயபுரம், பஞ்சபட்டியில் 21.0 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கரூர் மாவட்டத்தின் சராசரி மழை அளவு 165.80 மி.மீ. ஆகும். இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.