கரூரில் டிராவல்ஸ் வேன் மோதி பெண் படுகாயம்

670பார்த்தது
கரூரில் டிராவல்ஸ் வேன் மோதி பெண் படுகாயம்
கரூர் மண்மங்கலம் கிழக்கூர் பகுதியைச் சேர்ந்த 28 வயதான இந்துமதி, தனது ஸ்கூட்டியில் லட்சுமி என்பவரை பின்னால் அமர வைத்து மே 26 அன்று மண்மங்கலம் சர்வீஸ் சாலை பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பிரபு ஓட்டி வந்த மினி ட்ராவல்ஸ் வேன் மோதியதில் இருவரும் படுகாயமடைந்தனர். இருவரும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்துமதி அளித்த புகாரின் பேரில் வாங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி