கரூரில் அடையாளம் தெரியாத கார் மோதி பெண் படுகாயம்

404பார்த்தது
கரூரில் அடையாளம் தெரியாத கார் மோதி பெண் படுகாயம்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் நந்தன் கோட்டையைச் சேர்ந்த முத்துலட்சுமி (60) என்பவர், கடந்த 21ஆம் தேதி சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றதில் வலது கால் முழங்கால் மற்றும் மார்பில் பலத்த காயமடைந்தார். கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வெங்கமேடு போலீசார் நேற்று முன்தினம் (மே 22) வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி