கரூர்: படித்துறை மேம்படுத்தும் பணியை துவக்கி வைத்த எம்எல்ஏ

400பார்த்தது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி வார்டு எண்:2 அம்சவள்ளி மாரியம்மன் கோவில் தெருவின், தென்கரை வாய்க்காலில் பெண்களின் வசதிக்காக படித்துறை மேம்படுத்தும் பணி துவக்கிவைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் ரவிராஜா, பேரூர் கழக செயலாளர் சசிகுமார், பேரூராட்சி தலைவர் சேதுமணி மகாலிங்கம், மாவட்ட அமைப்பாளர் அம்பிகாபதி, வார்டு கழக செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இப்பணி பெண்களின் நலனை கருத்தில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி