கரூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் தியாகராஜன் காளியப்பனூர், வெங்ககல்பட்டி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். தேர்தல் பொறுப்பாளர் அசோக்குமார், கரூரில் உதயசூரியன் சின்னம் நிச்சயம் வெற்றி பெறும் என உறுதியாகத் தெரிவித்தார். தியாகராஜன், கரூர் மாவட்ட வளர்ச்சிக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களைச் செய்துள்ளதாகத் தெரிவித்தார்.