கரூர் அருகே காட்டூர் நல்லம்பாளையம் பகுதியைச் சேர்ந்த 50 வயதான பால் வியாபாரி சுகவனம், நேற்று முன்தினம் கிணற்றில் தவறி விழுந்தார். இரண்டு நாட்களாக பாறையைப் பிடித்துக்கொண்டு தண்ணீரில் மிதந்துள்ளார். நேற்று (மே 18) சத்தம் கேட்டு அவ்வழியே வந்தவர்கள் பார்த்து தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்புத் துறையினர் ரோப் கயிறு மூலம் அவரைப் பாதுகாப்பாக மீட்டனர். தற்போது வாங்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.