கரூர்: கார் மோதி ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண் படுகாயம்

461பார்த்தது
கரூர்: கார் மோதி ஸ்கூட்டியில் சென்ற இளம்பெண் படுகாயம்
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா வேப்பங்குடி பகுதியைச் சேர்ந்த தங்கத்தாமரை (32) என்பவர் மே 26 அன்று லிங்கத்தூர் சாலையில் தனது யமஹா ஸ்கூட்டியில் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த அன்புராஜ் ஓட்டி வந்த கார் மோதியதில் கீழே விழுந்து கை, கால், முகத்தில் காயமடைந்தார். அவர் கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று புகார் அளித்துள்ளார். வெள்ளியணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி