
கரூர் மாவட்டத்தில் மது விற்ற 8 பேர் கைது
கரூர் உட்கோட்டம் வாங்கல், பசுபதிபாளையம், பாலவிடுதி, நங்கவரம், தோகைமலை, அரவக்குறிச்சி காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். மது விற்ற கொடியரசு, பிரபு, வளர்மதி, சுரேஷ், பாண்டியன், சின்னதுரை, அருண்குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிந்து நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும், விற்பனைக்கு வைத்திருந்த 208 மதுபாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன.






























