
கரூர்: தாலி கட்டிய வீடியோ.. பெண் தற்கொலை முயற்சி
கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பி.காம் மாணவிக்கு, காதலன் பாலமுருகன் கட்டாய தாலி கட்டி, வீடியோவை வெளியிடுவதாகவும், குடும்பத்துடன் எரித்துக் கொலை செய்வதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் விரக்தியடைந்த மாணவி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை குடும்பத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். வேலாயுதம்பாளையம் போலீசார் பாலமுருகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.




























