மேட்டூர் அணையில் இருந்து கரூர் மாயனூர் கதவணைக்கு இன்று மாலை 4 மணி நிலவரப்படி 14471 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் மொத்த கொள்ளளவு 836.84 கன அடி நீராக உள்ளது. கதவணையில் இருந்து 13211 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது. தென்கரை பாசன வாய்க்காலுக்கு 450 கன அடி, புதிய மற்றும் பழைய கட்டளை மேட்டு வாய்க்காலுக்கு 800 கன அடி, கிருஷ்ணராயபுரம் கிளை வாய்க்காலுக்கு 20 கன அடி நீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டுள்ளது.