கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா மாவத்தூர் கருத்தரிக்காம்பட்டியைச் சேர்ந்த 30 வயது மகேந்திரன், திருமலை ராயபுரம் சாலையில் குருடம்பாறை அருகே பைக்கில் சென்றபோது, சதாசிவம் ஓட்டி வந்த டிராக்டர் மோதியதில் பலத்த காயமடைந்து கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து மகேந்திரனின் தந்தை பிச்சை அளித்த புகாரின் பேரில், பாலவிடுதி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.