மாயனூர் கதவணை அருகே காரில் மணல் கடத்தல் வாலிபர் தப்பி ஓட்டம்

50பார்த்தது
மாயனூர் கதவணை அருகே காரில் மணல் கடத்தல் வாலிபர் தப்பி ஓட்டம்
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மாயனூர் கதவணை அருகே நேற்று மாயனூர் உதவி காவல் ஆய்வாளர் சசிகலா வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மகேந்திரா காரில் காவிரி ஆற்று மணலை கடத்தி வந்தது தெரியவந்தது. அதனையடுத்து ஆறு சாக்கு மூட்டைகளுடன் மகேந்திரா கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய நச்சலூர் வஉசி நகரை சேர்ந்த ராஜேஷ் (28) என்பவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி