வெள்ளியணையில் அரசு பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கல்

355பார்த்தது
வெள்ளியணையில் அரசு பள்ளி மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கல்
தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சியை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். கரூர் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சார்பில் வெள்ளியணை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி தலைமையில் மாணவிகளுக்கு மிதிவண்டிகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர், பள்ளி ஆசிரியர்கள், திமுக தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி