செவலூரில் ஒலிபெருக்கியால் ஒருவரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு

51பார்த்தது
செவலூரில் ஒலிபெருக்கியால் ஒருவரை தாக்கிய 5 பேர் மீது வழக்கு
கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா செவலூர் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள் 60. இவரது ஊரில் ஒருவரின் இறப்பு நிகழ்ச்சிக்கு ஒலிபெருக்கி கட்டியுள்ளனர். அதில் சத்தம் அதிகமாக வந்ததால் ஒலிபெருக்கியை மறுபக்கம் திருப்பி வைக்க பெருமாள் கூறியுள்ளார். அதற்கு முனியப்பன், காளியப்பன், செந்தில், மாணிக்கம், தங்கராசு மற்றும் இரண்டு நபர்கள் ஒன்றுசேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர். பிறகு மறுநாள் 3 ஆம் தேதி தரகம்பட்டி டாஸ்மாக் அருகே மது வாங்கி வந்துகொண்டிருந்த பெருமாளை அதே நபர்கள் கைகளால் தாக்கி ஜாதிப்பெயரை கூறி திட்டியுள்ளனர். இதில் காயமடைந்த பெருமாள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய பிறகு புகார் அளித்துள்ளார். அதனையடுத்து சிந்தாமணிபட்டி போலீசார் 5 பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி