கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மனவாசி இந்திரா காலனியைச் சேர்ந்தவர் ராஜகோபால் (48). இவரின் மனைவி தமிழரசிக்கும் அதே பகுதியைச் சேர்ந்த பரிமளா என்பவருக்கும் மாடு மேய்க்கும் போது நேற்று வாய்த் தகராறு ஏற்பட்டுள்ளது.
அதனை அடுத்து பரிமளாவின் உறவினர்கள் ஒன்று சேர்ந்து ராஜகோபால், மனைவி தமிழரசி, மகன் விமல் ராஜ் ஆகிய 3 பேரை திட்டி கம்பியால் அடித்து காயம் ஏற்படுத்தியுள்ளனர். காயம் பட்ட 3 பேரும் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராஜகோபால் அளித்த புகாரின் பேரில் சிவக்குமார், ஸ்ரீதர், விஷ்ணு, இளங்கோவன், பரிமளா, பாலமுருகன் ஆகிய 6 பேர் மீது மாயனூர் போலீசார் இன்று வழக்கு பதிந்து சிவக்குமார் மற்றும் ஸ்ரீதரை கைது செய்துள்ளனர்.