கரூர் மாவட்டம் ரெங்கநாதபுரம் வடக்கு விஏஓ வினோத் குமார் நேற்று கட்டளை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது, மாட்டு வண்டியில் சட்டவிரோதமாக மணல் கடத்தி வந்த ஒருவர் வண்டியை விட்டு தப்பிச் சென்றார். இது தொடர்பாக வினோத்குமார் அளித்த புகாரின் பேரில், தப்பி ஓடிய அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன் (37) மீது மாயனூர் போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.