கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா மத்தகிரி அடுத்த குள்ளரெங்கம்பட்டியைச் சேர்ந்தவர் தங்கராசு (வயது 48). லாரி ஓட்டுநரான இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவரின் மூத்த மகன் நித்தீஸ்வரன் பிளஸ் டூ முடித்துவிட்டு கல்லூரி செல்ல வரவனை பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் என்பவரை அணுகி உதவி கேட்டுள்ளார்.
அதற்கு அவர் கோவையில் உள்ள ஜான்சன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் கோட்டாவில் சேர்ப்பதாக ரூபாய் 20 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக தங்கராசு புகார் அளித்ததன் பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் நேற்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.