கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா பாப்பையம்பாடியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி 55. இவர் கடந்த 13 ஆம் தேதி வீட்டில் இருந்தபோது அவருடைய செல்போன் நம்பருக்கு அஜித் என்பவர் தொடர்பு கொண்டு எங்கே இருக்கிறாய் என கேட்டுள்ளார். பிறகு இரவு வீட்டின் வெளியே சத்தம் கேட்டதை அறிந்து வெளியே எழுந்து பார்த்தபோது அஜித் அறிவாலுடன் நின்று கொண்டு பழனிச்சாமியை வெட்ட முயன்றுள்ளார். இதை தடுத்தபோது கையில் காயம் ஏற்பட்டது. அங்கிருந்து சத்தம் போடவே அஜித் தப்பி ஓடி உள்ளார். பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்து புகார் அளித்துள்ளார். அதனை எடுத்து அஜித்குமார் மீது லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை.