சிந்தலவாடியில் மகா மாரியம்மன் திருவிழா முன்னிட்டு தூக்குதேர்

334பார்த்தது
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிந்தலவாடி ஸ்ரீ மகா மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு இன்று தூக்கு தேரோட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு, தூக்குத் தேரைத் தங்கள் தோள்களில் சுமந்து கோவிலைச் சுற்றி மூன்று முறை வலம் வந்து, சுவாமியை தரிசனம் செய்தனர். மேலும், பக்தர்கள் மாவிளக்கு ஏற்றியும், தேங்காய், பழம் உடைத்தும் அர்ச்சனை செய்து அம்மனை வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி