தாலியாம்பட்டியில் இரு தரப்பினர் இடையே தகராறு

66பார்த்தது
தாலியாம்பட்டியில் இரு தரப்பினர் இடையே தகராறு
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுகா வேங்காம்பட்டியை சேர்ந்தவர் கண்ணதாசன் 26. இவர் கடந்த 8 ஆம் தேதி தாலியாம்பட்டி ஓய்வுநாள் அங்காடி அருகே சுபாஷ் (25) என்பவருடன் மது அருந்திவிட்டு சாப்பிட்டுள்ளனர். 

அப்போது சுபாஷ் சாப்பிட்டதற்கு பணம் தர மறுத்ததால் பணத்தைக் கேட்ட கண்ணதாசனை திட்டி குச்சியால் தாக்கியுள்ளார். 108 ஆம்புலன்ஸ் மூலம் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கண்ணதாசன் புகார் அளித்துள்ளார். அதனை அடுத்து சுபாஷ் மீது லாலாபேட்டை போலீசார் இன்று வழக்கு பதிவு செய்தனர். அதேபோல் மற்றொரு புகாரில் சுபாஷின் தாயார் சத்யா கணவருடன் கடந்த 8 ஆம் தேதி வீட்டில் இருந்த போது அங்கு வந்த கண்ணதாசன் தகாத வார்த்தைகளால் திட்டி குச்சியால் அடித்தபோது தடுக்க வந்த சத்யாவின் கணவர் பெரியசாமியையும் தாக்கி விட்டு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

காயமடைந்த இருவரும் குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். சத்யா அளித்த புகாரின் பேரில் கண்ணதாசன் மீது லாலாபேட்டை போலீசார் இன்று வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி