மாயனூரில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு

669பார்த்தது
மாயனூரில் கிணற்றில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
கரூர் மாவட்டம் கடவூர், வீரியம்பட்டியைச் சேர்ந்த 65 வயதான வேலுச்சாமி, தனது வீட்டின் அருகே உள்ள கிணற்றில் விழுந்த கோழியை மீட்க முயன்றபோது தவறி கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். நேற்று முன்தினம் நடந்த இந்த சம்பவத்தில், தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் உடலை மீட்டு கரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மாயனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி