கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா சேவாப்பூர் பகுதியைச் சேர்ந்த கருணகிரி (48) என்ற விவசாயி, நேற்று இரவு 9:45 மணியளவில் வளையப்பட்டியில் உள்ள தனது களத்து வீட்டிற்குச் சென்றபோது, மர்ம நபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் அவரைச் சுட்டனர். 10 பால்ரச குண்டுகளால் காயமடைந்த கருணகிரி, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பாலவிடுதி போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.