கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா வீரணம் பட்டியை சேர்ந்தவர் சுப்பிரமணி 45. இவர் பால்மடைபட்டியில் உள்ள தனக்குச் சொந்தமான ஃபாஸ்ட் புட் கடை அருகே சட்டவிரோதமாக மது விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்து அங்கு சென்ற சிந்தாமணி பட்டி போலீசார் மது விற்ற சுப்பிரமணி மீது வழக்கு பதிந்து நேற்று கைது செய்தனர். மேலும் விற்பனைக்கு வைத்திருந்த 27 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.