மாயனூரில் வணிக கடைகளில் தீ பிடித்து விபத்து

60பார்த்தது
மாயனூரில் வணிக கடைகளில் தீ பிடித்து விபத்து
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தாலுக்கா மாயனூர் புதுதெருவைச் சேர்ந்தவர் லட்சுமணன் (52). இவர் மாயனூர் பஸ் ஸ்டாண்ட் அருகே மெக்கானிக் கடை வைத்துள்ளார். கடந்த 8ஆம் தேதி இரவு இவரது மெக்கானிக் கடை மற்றும் அருகே உள்ள காய்கறிக்கடை, கறிக்கடையில் தீப்பிடித்து எரிந்துள்ளது. 

அதனையடுத்து தகவல் அறிந்து அங்கு சென்று பார்த்த பிறகு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீர் விட்டு அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் 8 இரு சக்கர வாகனங்கள், 25 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள், 2000 ரூபாய் மதிப்புள்ள கறிக்கடை பொருட்கள் சேதமடைந்தன. இது குறித்து லட்சுமணன் புகாரில் மாயனூர் போலீசார் நேற்று வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி