கரூர்: முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

483பார்த்தது
கரூர்: முதியவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
கரூர் மாவட்டம் லாலாபேட்டை அருகே பில்லாபாளையத்தைச் சேர்ந்த 62 வயதான தர்மராஜுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் மற்றும் இதயப் பிரச்சனைகள் இருந்தன. ஒரு மாதம் முன்பு வண்டியில் இருந்து தடுமாறி விழுந்ததில் காயமடைந்த அவர், கடந்த 11 ஆம் தேதி மீண்டும் கீழே விழுந்ததில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து அவரது மகன் சங்கர் அளித்த புகாரின் பேரில் லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி