தோகைமலையில் கார் மோதி கணவன், மனைவி படுகாயம்

50பார்த்தது
தோகைமலையில் கார் மோதி கணவன், மனைவி படுகாயம்
கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்கா வெள்ளப்பட்டி அடுத்த கரட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி அபிராமி 29. இவர் கடந்த ஒன்றாம் தேதி தனது கணவரின் பைக்கில் பின்னால் அமர்ந்துகொண்டு காவல்காரன்பட்டி வேங்கைநகர் அருகே சென்றுகொண்டிருந்தார். 

அப்போது எதிரே திருச்சி அம்மாபேட்டையைச் சேர்ந்த நவீன் ராஜா ஓட்டிவந்த கார் மோதியதில் கணவன் மனைவி இருவரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து அபிராமி அளித்த புகாரின் பேரில் தோகைமலை போலீசார் இன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.