ஜெகதாபியில் விசிக சார்பில் நிர்வாகிகள் அறிமுகக் கூட்டம்

0பார்த்தது
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம், ஜெகதாபி சமுதாய கூடத்தில் மாவட்ட செயலாளர் அவிநாசி தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட பொருளாளர் பெரியசாமி, மாவட்ட செய்தி தொடர்பாளர் மகாமுனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தாந்தோணி ஒன்றிய செயலாளர் வரவேற்புரையாற்றினார். மண்டல செயலாளர் வேலுசாமி, முன்னாள் மாவட்ட செயலாளர் சக்திவேல், இளங்கோ, ரிபாய்தீன், மாநில நிர்வாகி அகரமுத்து, ராமச்சந்திரன், செந்தில்குமார் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், மகளிர் அணி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி