கரூர்: டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல்; இருவர் படுகாயம்

71பார்த்தது
கரூர், தாந்தோணி மலை, அன்பு நகரைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் வயது 54. இவர் ஜூன் 9-ம் தேதி மாலை 5:30 மணி அளவில், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்குட்பட்ட சேங்கல் பகுதியில் இருந்து உப்பிடமங்கலம் செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம் லட்சுமணன் பட்டி அருகே சென்றபோது, எதிர்த்திசையில் கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, பாம்பரன் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் வயது 25 என்பவர் வேகமாக ஓட்டி வந்த மற்றொரு டூவீலர், ராமச்சந்திரன் ஓட்டிய டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. 

இதில் இருவரும் வாகனத்துடன் கீழே விழுந்ததில் இருவருக்கும் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இதில் ராமச்சந்திரனை மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், ராஜ்குமாரை மீட்டு திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக ராமச்சந்திரன் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்ட  வெள்ளியணை காவல்துறையினர், டூவீலரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய ராஜ்குமார் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you