லாலாபேட்டை மாணவர்கள் 3 தங்கம், 4 வெள்ளி பெற்று சாதனை

1பார்த்தது
லாலாபேட்டை மாணவர்கள் 3 தங்கம், 4 வெள்ளி பெற்று சாதனை
கரூர்: கரூரில் நேற்று முதல் நடைபெற்று வரும் மாநில அளவிலான ஜூடோ, கேரம் மற்றும் மிதிவண்டி போட்டிகளில், லாலாபேட்டை அரசு உயர்நிலைப்பள்ளி மாணவிகள் ஜூடோ பிரிவில் பங்கேற்று தங்கப் பதக்கங்களை வென்று அசத்தியுள்ளனர். பிரதீபா, தீப்ஷிகா, திவ்யதர்ஷினி ஆகியோர் தங்கப் பதக்கங்களையும், சாதனா, அனுஷ்கா, மகாலட்சுமி, நிவ்யதர்ஷினி ஆகியோர் வெள்ளிப் பதக்கங்களையும் வென்றுள்ளனர். இவர்களின் வெற்றிக்கு பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி