கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகே திம்மாச்சிபுரத்தைச் சேர்ந்தவர் சாமிநாதன் (58). இவர் கடந்த ஆறாம் தேதி தனது டிவிஎஸ் 50 வாகனத்தில் கே. பேட்டை பெட்ரோல் பங்க் அருகே சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது பால்பாண்டி ஒட்டி வந்த கார் பின்னால் மோதியதில் சாமிநாதன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி புகாரில் லாலாபேட்டை போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.