கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் நிர்வாகத்தை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கிருஷ்ணராயபுரம் ஒன்றிய குழுவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் நாகராஜன் தலைமையில் இன்று (ஜனவரி 10) நடைபெற்றது. இதில் வி. ச மாவட்ட தலைவர் கந்தசாமி, மாவட்ட செயலாளர் சக்திவேல், மாவட்ட பொருளாளர் சுப்பிரமணியன் கண்டன உரை நிகழ்த்தினர். சிபிஐஎம் ஒன்றிய செயலாளர் தர்மலிங்கம், மாவட்ட குழு வழக்கறிஞர் சரவணன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் நாகராஜ், பார்த்திபன் ஆகியோர் கலந்து கொண்டனர்