சீத்தப்பட்டி சாலையில் இறந்தவரின் உடலை வைத்து சாலை மறியல்

0பார்த்தது
கரூர் மாவட்டம் கடவூர் தாலுக்காவைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ராமன் (30), கடந்த மாதம் 30 ஆம் தேதி நண்பரின் பைக்கில் சென்றபோது, கடவூர் வட்டாட்சியர் அலுவலக மண்டல துணை வட்டாட்சியர் உதயகுமார் ஓட்டி வந்த கார் மோதி படுகாயமடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், 5 நாட்களுக்குப் பிறகு இன்று உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த ராமனின் உறவினர்கள், சீத்தப்பட்டி சாலையில் அவரது உடலை வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி