கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா மாவத்தூர் அடுத்த சின்னாம்பட்டியை சேர்ந்தவர் ரஞ்சித் குமார் (23). இவர் கடந்த 26 ஆம் தேதி வேலைக்கு செல்லாததை அவரின் தந்தை முருகன் கண்டித்துள்ளார். இதனால் மனவிரக்தி அடைந்த ரஞ்சித் குமார் நேற்று (மார்ச் 28) வீரியப்பட்டியில் உள்ள தனது சகோதரி வீட்டிற்கு வந்துள்ளார்.
அங்கு யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரின் உடல் கரூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இவரின் தந்தை முருகன் அளித்த புகாரின் பேரில் மாயனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.